Idhayam Matrimony

மும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை: சிவப்பு எச்சரிக்கை

திங்கட்கிழமை, 15 செப்டம்பர் 2025      இந்தியா
Rain 2023-07-13

Source: provided

மும்பை : மும்பையில் கொட்டித் தீர்த்த கனமழையால் அந்த பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.

மும்பையில் பல பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழையால் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதையடுத்து, இந்திய வானிலை ஆய்வு மையம் மும்பைக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மும்பையில் நள்ளிரவு தொடர்ந்து பெய்த கனமழையால் சாலைகள் வெள்ளக் காடாகின. இதனிடையே, மும்பை, தாணே மற்றும் ராய்கர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீச வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகரின் பல பகுதிகளில் பெய்த கனமழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்தேரி சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியிருப்பதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, கோகலே பாலம் வழியாகப் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், நேற்று காலை முதல் புணேவில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது.

மேலும் நேற்று கொங்கண், கோவா, மத்திய மகாராஷ்டிரம் மற்றும் மராத்வாடாவில் ஆங்காங்கே சில இடங்களில் கனமழை முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வானிலை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனிடையே, திங்கள்கிழமை காலை தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மும்பையின் வடலா பகுதியில் மோனோ ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் எவ்வித பாதிப்புமில்லை. அனைத்து பயணிகளும் வெளியேற்றப்பட்டு மற்றொரு மோனோ ரயிலில் அனுப்பப்பட்டதாக மும்பை பெருநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 19 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 19 hours ago
View all comments

வாசகர் கருத்து