எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, இந்தியைத் திணிப்பதில் மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து தோல்வி கண்டபோதிலும், விடாமல் இந்தியைத் திணிக்க முயன்று வருகிறது.
தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டிருக்கும் ஒரு தேசத்தில், 22 அலுவல் மொழிகளைக் கொண்டிருக்கும் அரசின் நிர்வாகத்தில் ஒற்றை மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பது எதேச்சதிகாரப் போக்காகும்.
மத்திய அரசு நிர்வாகத்தின் அச்சாணியாக இந்தியை மாற்றுவதே லட்சியம் என்று கூறுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது ஆகும். இந்தியைத் திணிப்பதில் மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து தோல்வி கண்டபோதிலும், விடாமல் இந்தியைத் திணிக்க முயன்று வருகிறது. மத்திய அரசின் நிர்வாகத்தில் அலுவல் மொழியாக 22 மொழிகள் இருக்கும்போது, இந்தியை மட்டுமே தொழில்நுட்பம், அறிவியல், நீதி, கல்வி மற்றும் நிர்வாகத்தின் அச்சாணியாக மாற்ற நினைப்பது எதேச்சதிகாரப் போக்கு. மத்தியத்தை ஆளும் அரசானது, நாட்டிலுள்ள அத்தனை மதத்தினரையும் மொழியினரையும் மாநிலத்தவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும்.
இதுவே நாட்டின் ஒட்டு மொத்தப் பகுதிகளும் வளர்ச்சி அடைவதற்கான வழி ஆகும். இந்தி பேசாத மாநிலங்கள், பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் என்று பிரித்துப் பார்ப்பதும், ஒற்றை மொழிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதும் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானவை. எனவே கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சியை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு நிர்வாகத்தின் அச்சாணியாக இந்தியை மாற்றுவதே லட்சியம் என்ற தன் கருத்தை மத்திய உள்துறை அமைச்சர் திரும்பப் பெற வேண்டும் என்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


