Idhayam Matrimony

உத்தரகாண்டில் மேகவெடிப்பு: நிலச்சரிவு சாலைகள் துண்டிப்பு

செவ்வாய்க்கிழமை, 16 செப்டம்பர் 2025      இந்தியா
USA 2025-07-05

Source: provided

உத்தரகாண்ட் : உத்தரகாண்டில் மேகவெடிப்பு காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் சாலைகள் துண்டிக்கப்பட்டது 5 பேர் மாயமாகி உள்ளனர்.

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் இந்தியாவின் வட மாநிலங்களில் மேக வெடிப்பால் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் திடீரென கொட்டும் அதி கனமழையால் நிலச்சரிவு, வெள்ளம் ஏற்பட்டு கடுமையான பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

நேற்று  அதிகாலை உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் மேகங்கள் திரண்டு மழை பெய்தது. அப்போது திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு சஹஸ்த்ரதாராவில் மிக கனமழை கொட்டியது. இதனால் சாலைகளில் கடும் வெள்ளம் ஓடியது. அப்போது சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. அங்குள்ள கடைகளில் வெள்ளம் புகுந்து அடித்துச் செல்லப்பட்டன. சிறிய கட்டிடங்கள் பல மண்ணோடு புதைந்தன. மேலும் அங்குள்ள ஐ.டி. பார்க் பகுதியிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கார்கள் மற்றும் கடைகள் வெள்ளத்தில் சிக்கியதில் 2 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை மீட்பு படையினர் தேடி வருகின்றனர். முன்னதாக, பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள சாலையில் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி துண்டிக்கப்பட்டதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாலையை விரைவில் திறக்க மாநில நிர்வாகம் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. டேராடூனில் மேக வெடிப்பைத் தொடர்ந்து ரிஷிகேஷில் உள்ள சந்திரபாகா நதியில் காலை முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரால் 3 பேர் ஆற்றில் சிக்கிக் கொண்டனர். அவர்களை பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டனர்.

இந்த சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், மாவட்ட நீதிபதி சவின் பன்சால், துணைப் பிரிவு நீதிபதி கும்கம் ஜோஷி மற்றும் பிற அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேதத்தை பார்வையிட்டனர். காணாமல் போனவர்களை விரைவில் தேடி மீட்குமாறு மீட்பு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். கனமழை மற்றும் மேக வெடிப்பு காரணமாக டேராடூனில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி, உள்ளூர் நிர்வாகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், நிலைமையை கண்காணித்து வருவதாகவும், மக்களை பாதுகாக்க தொடர்ந்து முயற்சித்து  வருவதாகவும் தெரிவித்துள்ளார். உத்தரகாண்டின் தரலி-ஹர்சில், சாமோலியில் தரலி, ருத்ரபிரயாக்கில் உள்ள செனகாட், பவுரியில் சைன்ஜி, பாகேஷ்வரில் காப்கோட் மற்றும் நைனிடால் மாவட்டத்தின் சில பகுதிகளில் பலத்த மழை, மேக வெடிப்புகள் மற்றும் நிலச்சரிவுகள் ஆகியவை இந்த பருவமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்தும் அங்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் முதல் உத்தரகாண்டில் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகளால் இதுவரை 85 பேர் உயிரிழந்துள்ளனர். 128 பேர் காயமடைந்துள்ளனர். 94 பேர் காணாமல் போயுள்ளனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு ரூ.1200 கோடி நிவாரணத் தொகையை அளித்துள்ளது. வெள்ள சேதத்தினை பார்வையிட்ட அமைச்சர்கள் குழுவின் பரிந்துரையின் பேரில் மேலும் நிதி ஒதுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இயற்கை பேரிடர்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மழை தொடர்ந்து வரும் நிலையில் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மழை நின்ற பிறகே உண்மையான பாதிப்புகள் கணக்கெடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து