Idhayam Matrimony

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அரிய நிகழ்வு: கூடலூரில் பூத்த நீலக்குறிஞ்சி பூ

புதன்கிழமை, 17 செப்டம்பர் 2025      தமிழகம்
Kadalore

Source: provided

கூடலூர்: 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அரிய நிகழ்வான குறிஞ்சிப் பூ பூத்ததை கூடலூரில் சுற்றுலாப்பயணிகள் பாரத்து வீடியோ எடுத்தனர்.

குறிஞ்சிப் பூ என்பது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் என்று நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம். நீலக்குறிஞ்சி என்ற இந்த வகைப் பூ, நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கேரள வனப்பகுதியில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும். ஸ்ட்ரோபிலாந்தஸ் குந்த்தியானா என்ற அறிவியல் பெயர் கொண்ட அரிய தாவரமான நீலக்குறிஞ்சி தற்போது கூடலூர் தாலுகா ஓவேலி வனப்பகுதியில் 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பூத்திருக்கிறது. இதை வனத்துறையினர் கண்டுபிடித்து அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

குறிஞ்சி மலர்கள் பூத்துக்குலுங்கும்போது ஒட்டுமொத்த மலைப்பகுதியும் நீல நிறத்தில் தெரிவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். தற்போது, குறிஞ்சிப் பூ பூத்திருக்கும் தகவலை கேள்விப்பட்டவுடன் சுற்றுலாப் பயணிகள் குவியத் தொடங்கியிருக்கிறார்கள். நீலக்குறிஞ்சி பூவைப் பார்த்து பரவசம் அடைந்த அவர்கள், தங்களுடைய செல்போனிலும் செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து