முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 பந்துவீச்சாளர் தரவரிசை: தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி முதலிடத்திற்கு முன்னேறினார்

புதன்கிழமை, 17 செப்டம்பர் 2025      விளையாட்டு
17-Ram-80-A

Source: provided

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஆடவருக்கான டி20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலை நேற்று வெளியானது. இதில் தமிழகத்தை சேர்ந்த வருண் சக்ரவர்த்தி முதல் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

அபிஷேக் சர்மா... 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஆடவருக்கான டி20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலை நேற்று வெளியானது. அதன்படி டி20 பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இந்தியாவின் அபிஷேக் சர்மா (884 புள்ளி) முதல் இடத்தில் உள்ளார். இங்கிலாந்தின் பில் சால்ட் (838 புள்ளி), ஜாஸ் பட்லர் (794 புள்ளி) தலா 1 இடங்கள் முன்னேறி 2வது மற்றும் 3வது இடத்தில் உள்ளனர்.

வருண் சக்ரவர்த்தி... 

இந்தியாவின் திலக் வர்மா (792 புள்ளி) 2 இடங்கள் சரிந்து 4வது இடத்திற்கு வந்துள்ளார். பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்தியாவின் வருண் சக்ரவர்த்தி (733 புள்ளி) 3 இடங்கள் உயர்ந்து முதல் இடத்திற்கு வந்துள்ளார். மற்றுமொரு இந்திய வீரர்  ரவி பிஷ்னோய் 2 இடங்கள் சறுக்கி 8-ம் இடத்துக்கு கீழிறங்கியுள்ளார். நியூசிலாந்தின் ஜேக்கப் டபி (717 புள்ளி) ஒரு இடம் சரிந்து 2வது இடத்திற்கு வந்துள்ளார். வெஸ்ட் இண்டீசின் அஹேல் ஹொசைன் (707 புள்ளி) 3வது இடத்தில் உள்ளார். 

ஹர்திக் பாண்ட்யா... 

டி20 ஆல்ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா (237 புள்ளி) முதல் இடத்திலும், ஆப்கானிஸ்தானின் முகமது நபி (213 புள்ளி) 2வது இடத்திலும் உள்ளனர். ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா (210 புள்ளி) ஒரு இடம் உயர்ந்து மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளார். 

35 விக்கெட்டுகள்... 

தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்திக்கு இந்தியா முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். வருண் சக்கரவர்த்தி மொத்தமாக 121 டி20 கிரிக்கெட் போட்டிகளில் 157 விக்கெட்டுகளை குவித்துள்ளார். குறிப்பாக, 20 சர்வதேச டி20 போட்டிகளில் 35 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்து முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 34 வயதாகும் வருண் சக்கரவர்த்தி கடந்த 2021-இல் இந்தியாவுக்கு டி20 போட்டிகளில் விளையாட தொடங்கினார். இந்தாண்டு முழுவதும் சிறப்பாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி 3 இடங்கள் முன்னேற்றம் கண்டு, முதல்முறையாக நம்.1 இடத்தைப் பிடித்துள்ளார். மூன்றாவது இந்தியராக இந்த சாதனை வருண் நிகழ்த்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

டி-20 பந்துவீச்சாளர்கள் தரவரிசை:

1. வருண் சக்கரவர்த்தி - 733 புள்ளிகள்.

2. ஜேக்கப் டஃபி - 717 புள்ளிகள்.

3. அகீல் ஹொசைன் - 707 புள்ளிகள்.

4. ஆடம் ஸாம்பா - 700 புள்ளிகள்.

5. ஆடில் ரஷித் - 696 புள்ளிகள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து