முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய ராணுவத்தில் பள்ளி மாணவர்கள் சேர வேண்டும்: முப்படை தலைமை தளபதி அழைப்பு

சனிக்கிழமை, 20 செப்டம்பர் 2025      இந்தியா
Anil-Chauhan-2025-09-20

ராஞ்சி, பள்ளி மாணவர்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்று முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் அழைப்பு விடுத்துள்ளார்.

ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள கவர்னர் மாளிகையில், முப்படை தலைமை தளபதி அனில் சவுகான், 36 பள்ளிக்கூடங்களை சேர்ந்த மாணவர்களுடன் உரையாடும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது மாணவர்களிடம் அனில் சவுகான் கூறியதாவது:-

ஆபரேஷன் சிந்தூர் ஒரு "புதிய வகையான போரை" முன்னறிவித்தது. மேலும் தாக்குதலின்போது பாகிஸ்தானை தோற்கடிப்பதை உறுதி செய்தது. பள்ளி மாணவர்கள் ராணுவத்தில் சேர வேண்டும். நாட்டுக்கு சேவை செய்ய மட்டுமல்ல, வேறு யாரும் உலகத்தை பார்க்க முடியாத வழிகளில் காண்பதற்காக ராணுவத்தில் சேர வேண்டும்.

கடமை வாழ்க்கை, ஒழுக்கம், ஒப்பற்ற சாகசம் ஆகியவை நிறைந்த வாழ்க்கையை அனுபவியுங்கள். செல்போன் திரைகளை பார்ப்பதை கைவிட்டு, டிஜிட்டல் உலகத்துக்கு அப்பால், பணம் கொடுத்தாலும் வாங்க முடியாத அனுபவங்களை பெறுங்கள். நாட்டின் பல பகுதிகளுக்கு சாகச பயணம் மேற்கொள்ளுங்கள்.

ராணுவத்தில் நாங்கள் போரிட மட்டும் கற்றுத்தருவது இல்லை. நாட்டையும், அதன் மக்களையும், நிலப்பரப்பையும் கற்றுத்தருகிறோம். ஆகவே, இந்தியாவை உண்மையாக அறிந்துகொள்ள சீருடை அணியுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து