Idhayam Matrimony

சக்தித் திருமகன் திரைவிமர்சனம்

திங்கட்கிழமை, 22 செப்டம்பர் 2025      சினிமா
Shakthi-Thirumagan 2025-09-

Source: provided

தலைமைச் செயலகத்தில் இடைத்தரகர் பணி செய்து வரும் விஜய் ஆண்டனி, கேட்ட பணத்தை கொடுத்தால் எந்த வேலையாக இருந்தாலும், அதை செய்து முடிக்க கூடியவர். இதே வேலையை சர்வதேச அளவில் செய்யும் வில்லன் சுனில் கிர்பலானி, விஜய் ஆண்டனியை அழிக்க நினைக்கிறார். அவரிடம் இருந்து விஜய் ஆண்டனி எப்படி தப்பிக்கிறார் என்பதைச் சொல்லும் படமே சக்தித் திருமகன். விஜய் ஆண்டனியின் திட்டங்களும், அதை செயல்படுத்தும் விதமும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. நாயகி திருப்தி ரவீந்திராவுக்கு பெரிய வேலை இல்லை என்றாலும், கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார். வில்லன் சுனிலின் திமிரான பேச்சும், உடல் மொழியும் அவரது கதாபாத்திரத்தை கவனிக்க வைக்கிறது. செல் முருகன், கிரண் குமார், ஷோபா விஸ்வநாத், ரியா ஜித்து, வாகை சந்திரசேகர் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களின் கதாபாத்திரமும் நடிப்பும் நிறைவு. விஜய் ஆண்டனி இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அருமை. எழுதி இயக்கியிருக்கும் அருண் பிரபு, சமகால அரசியல் மற்றும் மறைமுக அரசியல் வியாபாரத்தை அப்பட்டமாக சொல்லியிருக்கிறார். பால் விலை உயர்வு முதல் தோசை மாவுக்கு போடப்படும் ஜி.எஸ்.டி என அரசு திட்டங்களினால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுவது பற்றி மக்களை கேள்வி கேட்க தூண்டியிருக்கும் இயக்குநர் அருண் பிரபு இப்படத்தை ஒரு முறை பார்க்கும் படி கொடுத்திருக்கிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து