Idhayam Matrimony

சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் பல்டி

திங்கட்கிழமை, 22 செப்டம்பர் 2025      சினிமா
Baldi 2025-09-22

Source: provided

சாந்தோஷ் T. குருவில்லா மற்றும் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் பல்டி. உன்னி சிவலிங்கம் இயக்கியுள்ள இப்படத்தில் சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஷேன் நிகம் நாயகனாகவும், ப்ரீதி நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இப்படம் மலையாளம் மற்றும் தமிழில் வரும் செப்டம்பர் 26ஆம் தேதி வெளியாவதை ஒட்டி பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது. அப்போது இயக்குனர் உன்னி சிவலிங்கம் பேசும்போது, இப்படம் 60 சதவிகிதம் மலையாளத்திலும் 40 சதவிகிதம் தமிழிலும் கலந்து இருக்கும். விளையாட்டை மையப்படுத்தி இப்படத்தை இயக்கியிருக்கிறேன். சாந்தனுவிடம் கதை கூறினேன். அவருக்கு கதை பிடித்திருந்தது. அவருடன் 25 நாள் தான் படப்பிடிப்பு எடுத்தோம். ஆனால், அவருடன் நிறைய கருத்து வேறுபாடுகள் வந்து சென்றாலும் படத்திற்காக நன்றாக உழைத்திருக்கிறோம். ப்ரீதியிடம் அயோத்தி படம் போன்று இப்படத்தில் அழுது கொண்டே இருக்க வேண்டாம், வசனங்கள் பேச வேண்டும் என்றேன். எனக்கு மலையாளம் தெரியாது என்றார். இங்கு பலருக்கு மலையாளம் தெரியாது என்று கூறினேன். வசனங்களை இடையில் மாற்றினாலும் பயிற்சி எடுத்து சிறப்பாக பணியாற்றினார். பின்னர் பேசிய சாந்தனு, கபடி குழுவில் ஒருவர் காணாமல் போய்விட்டால் என்ன நடக்கும் என்பதை இப்படத்தில் கூறியிருக்கிறார்கள். 3 மாதங்கள் கபடி பயிற்சி எடுத்து நடித்தோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து