முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொன்னியின் செல்வன் 2 பாடல் விவகாரம்: ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிரான உத்தரவை ரத்து செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்

புதன்கிழமை, 24 செப்டம்பர் 2025      தமிழகம்
A R Rahman 2023-09-14

Source: provided

சென்னை : பொன்னியின் செல்வன் 2 பாடல் விவகாரத்தில் ஏ.ஆர். ரகுமானுக்கு எதிரான உத்தரவை ரத்து செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

மணி ரத்னம் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியானது பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் . இப்படத்தில் விக்ரம், ரவி மோகன், கார்த்தி, திரிஷா,ஐஷ்வர்யா ராய் மற்றும் பலர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்தார். படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்ற வீர ராஜ வீர பாடலின் மீது காப்புரிமை வழக்கு தொடுக்கப்பட்டது.இப்படத்தில் இடம் பெற்ற வீர ராஜ வீர பாடலின் மீது காப்புரிமை வழக்கு தொடுக்கப்பட்டது. இதனை பாடகரான ஃபையாஸ் வசிஃபுதின் டகர் கடந்த 2023 ஆம் ஆண்டு தொடுத்தார். ஏனெனில் இப்பாடல் அவர் தந்தை ஃபையாசுதின் டகர் மற்றும் மாமா ஸாஹிருதின் டகர் இசையமைத்த சிவ துதி பாடலில் இருந்து இப்பாடல் இசையமைப்பட்டுள்ளதாக வழக்கை தொடுத்தார்.

இந்த வழக்கில், ஏ.ஆர். ரகுமானுக்கு ரூ. 2 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் ரூ.2 கோடி நீதிமன்றத்தில் டெபாசிட் கட்டவேண்டும் எனவும் அனைத்து ஆன்லைன் தளங்களிலும் தாஹர் சகோதரர்கள் பெயரை கிரெடிட்டாக கொடுக்க வேண்டும் என்றும் தனி நீதிபதி உத்தரவுகள் பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து ஏ.ஆர். ரகுமான் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தொடந்தார். இந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட டெல்லி உயர்நீதிமன்ற அமர்வு, "தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து