எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
வாஷிங்டன் : இந்தியா-அமெரிக்கா வர்த்தகத்துடன் பல்வேறு கட்டங்களில் தொடர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்தியா மீது அமெரிக்க அரசு 25 சதவீதம் கூடுதல் வரியை அபராதமாக விதித்துள்ளது. இதன் மூலம் இந்தியா மீது அமெரிக்கா விதித்த மொத்த வரிகள் 50 சதவீதமாக உயர்ந்துள்ளன. அமெரிக்கா விதித்த வரி நியாயமற்றது என இந்தியா கூறியுள்ளது. இந்த நிலையில், அமெரிக்க அரசுடன் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியுஷ் கோயல் அமெரிக்கா சென்றுள்ளார். அவருடன் வர்த்தக துறை சிறப்பு செயலாளர் ராஜேஷ் அகர்வால் உள்ளிட்ட துறை சார்ந்த மூத்த அதிகாரிகள் உடன் சென்றுள்ளனர்.
அங்கு அமெரிக்க அரசின் வர்த்தக துறை மந்திரியுடன் பியுஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து வர்த்தகம் மற்றும் வர்த்தகம் சாராத விவகாரங்கள் குறித்து பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பேச்சுவார்த்தைகளை முடித்துவிட்டு பியுஷ் கோயல் மற்றும் குழுவினர் இந்த வார இறுதியில் இந்தியா திரும்ப உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளாக இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டணி நாடாக அமெரிக்கா இருந்து வருகிறது. இந்தியாவின் மொத்த பொருட்கள் ஏற்றுமதியில் அமெரிக்காவிற்கான ஏற்றுமதி சுமார் 18 சதவீதமாகவும், இறக்குமதி 6.22 சதவீதமாகவும் உள்ளது. இந்தியாவின் மொத்த வணிக வர்த்தகத்தில் 10.73 சதவீதம் அமெரிக்காவை சார்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


