Idhayam Matrimony

வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் ஆதாரில் பெயர், முகவரி திருத்தம் செய்ய கட்டணம் ரூ.75 ஆக உயர்வு

புதன்கிழமை, 24 செப்டம்பர் 2025      தமிழகம்
Aadhaar-card

Source: provided

சென்னை : ஆதாரில் பெயர், முகவரி மாற்றம் செய்ய கட்டணம் ரூ.50-ல் இருந்து ரூ.75-ஆக உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் அடையாள ஆவணமாகப் பயன்படும் ஆதார் அட்டையின் சேவைகள் வங்கி, அரசு நலத்திட்டங்கள் மற்றும் பல துறைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்நிலையில் ஆதார் அட்டை சேவைகளுக்கான கட்டணம், அக்டோபர் 1-ம் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்படி ஆதாரில் பெயர், முகவரி மாற்றம் செய்ய கட்டணம் ரூ50-ல் இருந்து ரூ.75-ஆக உயர்த்தப்படுகிறது. பயோமெட்ரிக்  மாற்றம் செய்ய, கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.125-ஆக உயர்த்தப்படுகிறது.

புதிய ஆதார் பெற விண்ணப்பிப்போருக்கு கட்டணம் இல்லை. இந்த கட்டண உயர்வு, செப்டம்பர் 30, 2028 வரை அமலில் இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்தால் அது நேரடியாக மக்களை பாதிக்கக்கூடும் என்றாலும், உயர்வு மிகக்குறைந்த அளவில் மட்டுமே உள்ளது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து