முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லடாக் மக்களின் குரலை நசுக்குகிறது: பா.ஜ.க. அரசு மீது கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 25 செப்டம்பர் 2025      தமிழகம்
Kejriwal 2024-02-17

புதுடெல்லி, லடாக் மக்களின் குரலை நசுக்கும் பா.ஜ.க. அரசு என்று அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து கோரி தலைநகர் லேயில் அங்குள்ள 'லே உச்ச அமைப்பு (எல்ஏபி) சார்பில் நடத்தப்பட்ட போராட்டம் புதன்கிழமை வன்முறையாக மாறியது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்ற பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.

வன்முறையைத் தொடர்ந்து லே மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில், இரண்டாவது நாளாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், பாதுகாப்புப் படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 5 பேருக்கு மேல் சாலைகளில் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-  அரசியல் போதையில் உள்ள பா.ஜ.க., மாநிலங்களை யூனியன் பிரதேசமாக்கி அதிகாரத்தை பறிக்கிறது. லடாக் மக்களின் குரலை பா.ஜ.க. நசுக்கப்பார்க்கிறது. தற்போது லடாக்கில் நடக்கும் போராட்டம் நாளை நாடு முழுவதுமான போராட்டமாக மாறலாம். லடாக்கில் நடப்பவை கவலை தருகிறது தேசபக்தர்கள் லடாக் மக்களை ஆதரிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து