முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யாவுடனான வர்த்தக விவகாரம்: அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

வியாழக்கிழமை, 25 செப்டம்பர் 2025      உலகம்
Trump

Source: provided

பீஜிங்: ரஷ்யாவுடனான வர்த்தகம் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், “ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் போருக்கு நிதியுதவி செய்வதில் இந்தியாவும், சீனாவும் முக்கிய பங்கு வகிக்கின்றன’’ என்று கூறினார். இந்நிலையில் அவரது விமர்சனத்தை சீனா நிராகரித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் குவோ ஜியாகுன் கூறுகையில், “அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்பட பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்து வருகின்றன. சீன நிறுவனங்களுக்கும், ரஷ்ய நிறுவனங்களுக்கும் இடையிலான இயல்பான பரிமாற்றங்களும், ஒத்துழைப்பும் உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைப்படி நடக்கின்றன. அந்த நிறுவனங்கள் எந்த மூன்றாம் நாட்டையும் குறிவைத்து செயல்படவில்லை. 

ஆகவே, ரஷ்யாவுடனான சீன நிறுவனங்களின் வர்த்தகத்தை எவ்விதத்திலும் தடுக்கக்கூடாது. அப்படி தடுத்தால், எங்கள் சட்டப்பூர்வ உரிமைகளை பாதுகாக்க எதிர் நடவடிக்கைகளை எடுப்போம். உக்ரைன் போருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்பதுதான் சீனாவின் நிலைப்பாடு” என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து