எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஸ்ரீவில்லிபுத்தூர்: மேகமலை புலிகள் காப்பகத்தில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு இரவு பற்றிய காட்டுத்தீ 2-வது நாளாக தொடர்ந்து எரிந்து வருகிறது. காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட செண்பகத்தோப்பு வனப்பகுதியில் அடர்ந்த மரங்கள், ஆண்டு முழுவதும் தண்ணீர் வரும் நீரோடைகள் உள்ளதால் யானை, சிறுத்தை, மான், காட்டு மாடு, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் வாழ்விடமாக உள்ளது.
செண்பகத் தோப்பு அடிவாரத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவில் அழகர்கோவில் பீட்டுக்கு உட்பட்ட மலைச்சரிவில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு மாலை காட்டுத்தீ பற்றியது. இரவில் காற்றின் வேகம் காரணமாக தீ வேகமாகப் பரவியது. நேற்று 2-வது நாளாக தீ எரிந்து வருகிறது. ஶ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் முருகன் உத்தரவில் வனச்சரகர் செல்லமணி தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் என 30-க்கும் மேற்பட்டோர் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அடர்ந்த மரங்கள் மற்றும் வன விலங்குகள் நிறைந்த பகுதியில் காட்டுத்தீ எரிவதால் விலங்குகள் உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதாக வன உயிரின ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


