முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுடன் பிரச்சனை இருக்கிறது: வங்கதேச இடைக்கால அரசு தலைவர்

வியாழக்கிழமை, 25 செப்டம்பர் 2025      உலகம்
mohammad-yunus---

Source: provided

டாக்கா: இந்தியா இடையிலான உறவில் விரிசல்  உள்ளது என்று வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதனால் அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா, பதவியில் இருந்து விலகி இந்தியாவுக்கு தப்பி வந்தார். அதன்பிறகு, முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்த அரசு பொதுத் தேர்தலை நடத்த ஆயத்தமாகி வருகிறது. ஐ.நா. பொதுச்சபையில் கலந்து கொள்வதற்கான அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள முகமது யூனுஸ் கூறியதாவது:-

வங்கதேசம்- இந்தியா இடையிலான உறவில் விரிசல் உள்ளது. ஏனென்றால், ஷேக் ஹசீனாவை பிரதமர் பதவியில் இருந்து வெளியேற்ற முக்கிய காரணமாக அமைந்த கடந்த வருடம் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தை இந்தியா விரும்பவில்லை. இந்திய மீடியாக்கள் போலி தகவல்களை பரப்பின. இது பதட்டத்தை மேலும் மோசமடைய வழிவகுத்தது. இந்தியாவில் இருந்து ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வந்தன. அந்த வீடியோக்களில் மாணவர்களின் போராட்டத்தை இஸ்லாமிய இயக்கம் எனக் கூறின. பிரச்சனையை உருவாக்கிய ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இது இந்தியா- வங்கதேசம் இடையே பிரச்சனையை ஏற்படுத்தியது. இவ்வாறு முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து