எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஜம்மு-காஷ்மீர்: பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு உதவியவரை போலீசார் கைது செய்தனர்.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் கொடூர துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலில் 25 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். உள்ளூர்வாசி ஒருவரும் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது.
இதற்கிடையே பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களை வேட்டையாட ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த ஆயுதங்களை பகுப்பாய்வு செய்ததில், பயங்கரவாதிகளுக்கு குல்காமில் வசித்து வரும் 26 வயதான முகமது யூசுப் கட்டாரியா தடவாள உதவிகள் செய்தது தெரியவந்தது. இதனடிப்படையில் போலீசார் கட்டாரியாவை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நிலையில், 14 நாள் போலீஸ் காவலில் அனுப்பப்பட்டுள்ளார். ஒப்பந்த வேலையில் பணிபுரிந்து வந்த நிலையில், உள்ளூர் குழந்தைகளுக்கும் கல்வி கற்பித்து வந்த கட்டாரியா, சில மாதங்களுக்கு முன்பு பயங்கரவாதிகளுடன் தொடர்பு கொண்டு அவர்களின் இயக்கங்களுக்கு உதவத் தொடங்கியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


