முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: இந்தியா - பாகிஸ்தான் அணிகள் 3-வது முறையாக மோத வாய்ப்பு

வியாழக்கிழமை, 25 செப்டம்பர் 2025      விளையாட்டு
Indian-team 2023-10-30

Source: provided

அபுதாபி: ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் 3-வது முறையாக மோத வாய்ப்புள்ளது.

இறுதிப் போட்டிக்கு....

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் 3-வது முறையாக மோத உள்ளன. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. 2-வது அணியாக முன்னேறுவது யார்? என்பது தெரியும். நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான்-வங்காள தேசம் அணிகள் மோதின. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இலங்கை அணி ஏற்கனவே வாய்ப்பை இழந்துவிட்டது.

மீண்டும் மோதும்... 

பாகிஸ்தான் வெற்றி பெற்றால் இந்தியாவுடன் இறுதிப் போட்டியில் மீண்டும் மோதும். இந்தப் போட்டித் தொடரில் இரு அணிகளும் ஏற்கனவே 2 முறை மோதி இருந்தன. 2 ஆட்டத்திலும் இந்தியாவே வெற்றி பெற்றது. கடந்த 14-ந்தேதி நடைபெற்ற லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் 21-ந்தேதி நடைபெற்ற 'சூப்பர் 4' சுற்று போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. இரு அணிகள் இடையேயான ஆட்டத்தில் விளையாட்டுக்கு அப்பால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. கைகுலுக்காத நிகழ்வு, வீரர்கள் இடையேயான வாக்குவாதம், ஆத்திரமூட்டும் சைகைகள் போன்ற சம்பவங்கள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து