முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேப்டனாக ஷ்ரேயாஸ் நியமனம்

வியாழக்கிழமை, 25 செப்டம்பர் 2025      விளையாட்டு
shreyas

Source: provided

இந்தியா 'ஏ'- ஆஸ்திரேலியா 'ஏ' அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆன 2நிலையில், ஆவது போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்திய 'ஏ' அணிஅணியின் கேப்டன் பதவியில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர் திடீரென விலகியதால் துருவ் ஜூரல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஆஸ்திரேலியா A அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடும் இந்தியா A அணியை பிசிசிஐ அறிவித்தது. ஒருநாள் தொடரில் கேப்டனாக ஷ்ரேயஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 1வது ஒரு நாள் போட்டிக்கான இந்திய ஏ அணி:- ஷ்ரேயாஸ் ஐயர் (C), பிரப்சிம்ரன் சிங் (WK), ரியான் பராக், ஆயுஷ் பதோனி, சூர்யன்ஷ் ஷெட்ஜ், விப்ராஜ் நிகம், நிஷாந்த் சிந்து, குர்ஜப்னீத் சிங், யுதிர் சிங், ரவி பிஷ்னாய், அபிஷேக் போரல், பிரியான்ஷ் ஆர்யா, சினுர்ஜீத் சிங்

இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய ஏ அணி: ஷ்ரேயாஸ் லியர் (C), திலக் வர்மா (VC), அபிஷேக் ஷர்மா, ப்ரப்சிம்ரன் சிங் (WK), ரியான் பராக், ஆயுஷ் பதோனி, சூர்யான்ஷ் ஷெட்ஜ், விப்ராஜ் நிகாம், நிஷாந்த் சிந்து, குர்ஜப்னீத் சிங், துதிஷ்னோ சிங், துதிஷ்னோ சிங், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், 

பாக்., வீரர்களுக்கு எதிராக புகார்

துபாயில் நடைபெற்று வரும் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறியுள்ளது. இதனிடையே, ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சச்சரவுகள் தொடர்ந்து கொண்டே வருகின்றன.

இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஹாரிஸ் ரவூப், சாஹிப்தாவுக்கு எதிராக ஐ.சி.சி.யிடம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் புகார் அளித்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 4 போட்டியின் போது இந்திய வீரர்களுக்கு கோபம் ஏற்படும் வகையில் சைகைகளை செய்ததாக பாகிஸ்தான் வீரர்கள் மீது இ-மெயில் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

வில்லனாக இருக்க வேண்டும்: சாம்சன்

வங்கதேசத்திற்கு எதிரான போட்டி முடிந்த பிறகு அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதில் நீங்கள் எந்த வரிசையில் விளையாட விருப்பமாக உள்ளீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு சஞ்சு சாம்சன் அளித்த பதில் பின்வருமாறு:- 40 ஆண்டுகளாக திரைத்துறையில் இருந்து நாட்டின் உயரிய விருது பெற்ற மோகன்லால், எல்லா விதமான கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். 

நானும் கடந்த 10 ஆண்டுகளாக நாட்டுக்காக விளையாடுகிறேன். அதனால், ஹீரோவாக மட்டுமாகவே இருப்பேன் என்று சொல்லமாட்டேன். சில நேரங்களில் வில்லன், காமெடியனாகவும் இருக்க வேண்டும். எல்லா இடத்திலும் இறங்கி விளையாட வேண்டும். என அவர் கூறினார்.

அஸ்வின் வெளியிட்ட வீடியோ

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐ.எல்.டி டி20 லீக் தொடருக்கான ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்தார். ரூ.1 கோடியை தனது அடிப்படை விலையாக அஸ்வின் நிர்ணயித்துள்ளார். இது எந்த வீரருக்கும் இல்லாத அதிகபட்ச விலையாகும். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பாஸ் தொடரில் அவர் இணைந்துள்ளார். அவர் சிட்னி தண்டர் அணிக்காக கையெழுத்திட்டுள்ளார். இதன்மூலம் பிபிஎல் தொடரில் விளையாடும் முதல் இந்திய வீரரானார் அஸ்வின். அவர் பிபிஎல் தொடரில் இணைந்ததை வீடியோ மூலம் வெளியிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து