முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

17-வது ஆசிய கோப்பை போட்டி: இந்தியா-பாகிஸ்தான் நாளை இறுதிப்போட்டியில் மோதல்

வெள்ளிக்கிழமை, 26 செப்டம்பர் 2025      விளையாட்டு
India 2023-11-24

Source: provided

துபாய் : 17-வது ஆசிய கோப்பை போட்டி தொடரின் இறுதிப்போட்டியில் நாளை இந்தியா-பாகிஸ்தான்  அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

முதல் அணியாக...

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் முன்னேறின. சூப்பர்4 சுற்று முடிவில் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும். அதன்படி 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்ற இந்தியா முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 

இறுதிப்போட்டிக்குள்.... 

இதனையடுத்து நேற்று நடைபெற்ற போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தியதன் மூலம் சூப்பர் 4 சுற்றில் 2-வது வெற்றியை பெற்ற பாகிஸ்தான் 2-வது அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. 2-வது தோல்வியை தழுவிய வங்காளதேசம் வெளியேறியது. இந்நிலையில் இதே மைதானத்தில் வருகிற 28-ந்தேதி நடக்கும் இறுதி ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதுகின்றன. முன்னதாக இவ்விரு அணிகள் லீக் மற்றும் சூப்பர்4 சுற்றில் சந்தித்த ஆட்டங்களில் இந்தியா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

பழித்தீர்க்குமா இந்தியா?

இதுவரை 5 முறை இந்தியாவும் பாகிஸ்தானும் ஐசிசி இறுதிப்போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், பாகிஸ்தானின் கையே ஓங்கியிருக்கிறது. ஆஸ்திரேலிய-ஆசிய கோப்பையில் இரண்டு முறையும் (1986, 1994), 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி என மூன்று முறை பாகிஸ்தான் அணியே பட்டத்தை வென்றுள்ளது.

1985 ஆம் ஆண்டில் நடைபெற்ற பென்சன் - ஹெட்ஜஸ் உலக கிரிக்கெட் சாம்பியன்ஷிப் மற்றும் தோனி தலைமையில் 2007 ஆம் ஆன்டு டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. இதனால், ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை பழித்தீர்க்குமா அல்லது பாகிஸ்தானின் கையே ஓங்குமா? என ரசிகர்கள் ஆவலில் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து