முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

17-வது ஆசிய கோப்பையை வெல்லூமா இந்தியா அணி? - பாகிஸ்தானுடன் இன்று மோதல்

சனிக்கிழமை, 27 செப்டம்பர் 2025      விளையாட்டு
India-Afghan 2025-09-19

Source: provided

துபாய் : 8 அணிகள் பங்கேற்றிருந்த 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இதில் நடைபெற்ற லீக் மற்றும் சூப்பர்4 சுற்றுகளின் முடிவில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. இன்று நடைபெறும் மகுடத்துக்கான இறுதிப்போட்டியில் பரமஎதிரியாக கருதப்படும் பாகிஸ்தான் அணியை இந்திய அணி எதிர்கொள்ள உள்ளது.

தோல்வியே சந்திக்காமல்... 

இதில் நடப்பு சாம்பியன் ஆன இந்திய அணி லீக் சுற்றில் யுஏஇ, பாகிஸ்தான் மற்றும் ஓமன் அணிகளை வரிசையாக வீழ்த்தியது. இதனையடுத்து நடைபெற்ற சூப்பர்4 சுற்றில் பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் இலங்கை அணிகளை வீழ்த்தி தோல்வியே சந்திக்காமல் கம்பீரமாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த சூழலில் இன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை தக்கவைக்கும் முனைப்புடன் இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது.

மூன்றாவது முறையாக... 

முன்னதாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஏற்கனவே செப்.14 ஆம் தேதி லீக் சுற்றிலும், அதனைத் தொடர்ந்து செப்.21 ஆம் தேதி சூப்பர் 4 சுற்றிலும் மோதியிருந்தன. இரண்டு போட்டிகளிலும் முறையே இந்திய அணி 7 மற்றும் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது. மூன்றாவது முறையாக இறுதிப்போட்டியில் வருகிற செப்.28 ஆம் தேதி இவ்விரு அணிகளும் கோப்பைக்கான போட்டியில் விளையாடவுள்ளன.

ரசிகர்கள் மத்தியில்....

ஹர்திக் பாண்ட்யா, அபிஷேக் சர்மா ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் எதிர்வரும் பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டியில் இருவரும் விளையாடுவது மிகவும் அவசியம். எனவே இருவரும் அதற்குள் முழு உடற்தகுதியை எட்டி விட வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மோர்கல் விளக்கம்... 

இந்நிலையில், இந்த வீரர்களின் காயம் குறித்து பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, ஆட்டத்தின் போது ஹர்திக் பாண்ட்யா மற்றும் அபிஷேக் சர்மா இருவருக்கும் தசை பிடிப்பு ஏற்பட்டது. இதில் ஒரு நாள் கழித்து ஹர்திக் பாண்ட்யா நிலைமை என்னவென்று முடிவு செய்ய முடியும். ஆனால் இப்போதைக்கு அபிஷேக் ஷர்மா மிகவும் நன்றாக இருக்கிறார். அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எங்களுடைய வீரர்கள் ஓய்வு எடுப்பது முக்கியம். அவர்கள் அனைவருக்குமே ஐஸ் குளியல் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. போட்டி முடிந்த உடனேயே அவர்களுக்கு மீட்பு வேலைகள் ஆரம்பித்துவிட்டது. இப்போதைக்கு அவர்கள் ஒரு இரவு நன்றாக தூங்கி எழுவதுதான் சிறந்த விஷயம். அவர்களுக்கு நல்ல ஓய்வு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

அபிஷேக்- ஹர்திக் காயம்

முன்னதாக இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய முன்னணி வீரர்களான அபிஷேக் சர்மா மற்றும் ஹர்திக் பாண்ட்யாவுக்கு காயத்தில் சிக்கினர். இருவரும் தசைவலியால் சிரமப்பட்ட நிலையில் ஆட்டத்தின்போது பீல்டிங் செய்கையில் பாதியில் வெளியேறினர். இதில் இன்னிங்சின் முதல் ஓவரில் ஒரு ஓவரை மட்டுமே வீசிய பிறகு பாண்ட்யா மைதானத்தை விட்டு வெளியேறினார். அதே நேரத்தில் அபிஷேக் 9.2 ஓவர்கள் பீல்டிங் செய்து மைதானத்தை விட்டு வெளியேறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து