எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெங்களூர்,மே.15 - கர்நாடக மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை இடைத் தேர்தலில் 3 தொகுதிகளிலும் பா.ஜ.க அமோக வெற்றி பெற்றுள்ளது. பங்காருபேட்டை(தனி) தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ எம். நாராயணசாமி, ஜகளூர்(தனி) தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. எஸ்.வி. ராமசந்திரா , சென்னப்பட்டணா தொகுதி மத சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ அஸ்வத் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து பா.ஜ.கவில் இணைந்தனர். தொடர்ந்து இந்த 3 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 9 ம் தேதி இடைத் தேர்தல் நடந்தது.
இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 3 தொகுதிகளிலும் தொடக்கம் முதலே பா.ஜ.க வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்தனர். பங்காரு பேட்டை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் நாராயணசாமி, ஜகளூர் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் எஸ்.வி. ராமச்சந்திரா, சென்னப்பட்டணா தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் சி.பி.யோகேஸ்வர் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். மூன்று தொகுதிகளிலும் கிடைத்த வெற்றியால் கர்நாடக சட்டப் பேரவையில் பா.ஜ.க உறுப்பினர்களின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது. காங்கிரசுக்கு 71, மஜதவுக்கு 26 எம்.எல்.ஏக்களும் உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


