Idhayam Matrimony

கரூர் கூட்டநெரிசல் சம்பவம்: அழுகுரல் ஏற்படுத்திய வலி என் நெஞ்சத்திலிருந்து அகலவில்லை : முதல்வர் மு.க.ஸ்டாலின் வேதனை

ஞாயிற்றுக்கிழமை, 28 செப்டம்பர் 2025      தமிழகம்
CM-2 2025-09-28

Source: provided

கரூர்  : கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் அழுகுரல் ஏற்படுத்திய வலி என் நெஞ்சத்திலிருந்து அகலவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.

கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். கூட்ட நெரிசல் குறித்து கேட்டறிந்த முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை நடத்தினார்.

உடனடியாக விமானத்தில் திருச்சி சென்று அங்கிருந்து கார் மூலம் கரூர் சென்றடைந்தார். மருத்துவமனைக்கு சென்ற கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு உயிரிழந்தோர் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய வீடியோவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "இரவு முழுவதும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சிந்திய கண்ணீரும், அவர்களது துக்கம் நிறைந்த அழுகுரல் ஏற்படுத்திய வலியும் என் நெஞ்சத்திலிருந்து அகலவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து