Idhayam Matrimony

இறந்தவர்கள் குடும்பத்துக்கு ஆறுதல் கூற விஜய் கரூர் செல்கிறார்; அனுமதி கேட்டு போலீசாரிடம் மனு

ஞாயிற்றுக்கிழமை, 28 செப்டம்பர் 2025      தமிழகம்
Vijay-2 2024-11-03

Source: provided

சென்னை : இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காகவும், இழப்பீடு வழங்குவதற்காகவும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கரூர் செல்ல திட்டமிட்டுள்ளார்.

கரூரில் நடந்த பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினார். தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்று விஜய் அறிவித்துள்ளார்.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து நேரில் ஆறுதல் கூறுவதற்கும், நிதி உதவி வழங்குவதற்கும் எப்போது கரூர் செல்வது என்பது தொடர்பாக அவர் ஆலோசனையில் ஈடுபட்டார். அதன் அடிப்படையில் பலியான குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காகவும், இழப்பீடு வழங்குவதற்காகவும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கரூர் செல்ல திட்டமிட்டுள்ளார். விஜய் கரூர் செல்வதற்காக அனுமதி கேட்டு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் போலீசில் மனு கொடுக்க உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago
View all comments

வாசகர் கருத்து