முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் : கரூரில் சீமான் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 28 செப்டம்பர் 2025      தமிழகம்
Seeman 2023 01 22

Source: provided

கரூர் : கரூர் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும், வருங்காலத்தில் இதுபோன்ற பேரிடர் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நேற்று முன்தினம் நடந்த த.வெ.க. பிரச்சாரக் கூட்டத்தில் 40 பேர் பலியான நிலையில், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இதனிடையே, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வந்த நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்த உடற்கூராய்வுக் கூடத்துக்கு வந்த போது உயிரிழந்தவர்ளின் உறவினர்கள் சீமானை உள்ளே அனுமதிக்காமல் அவரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து போலீஸார் உறவினர்களை சமாதானம் செய்து சீமானை அஞ்சலி செலுத்த அனுமதித்தனர்.

மேலும், காயமடைந்தவர்களை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது: ”எதிர்பாராத விதமாக நடந்த வேதனையை உண்டாக்கும் மோசமான சம்பவம். இனி பேரிடர் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதனை படிப்பினையாக எடுத்துக் கொண்டு வருங்காலங்களில் தவறு நிகழாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அதனைக் கடந்து வர வேண்டும். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்” என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து