எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கரூர் : கரூர் கூட்ட நெரிசல் விபத்துக்கு போலீசாரின் மெத்தன போக்குதான் முதல் காரணம் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நேற்று முன்தினம் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் 40 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், கரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் பலர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
அவர்களை தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மா.கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணன் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தனர். நாட்டையே உலுக்கிய கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக அரசியல் தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
அந்த வகையில், சசிகலா கூறியதாவது; கரூர் கூட்ட நெரிசல் விபத்துக்கு போலீசாரின் மெத்தன போக்குதான் முதல் காரணம். காவல்துறையை கையில் வைத்து இருக்கும் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் சும்மா வந்தோம் பார்த்தோம் என்று இருக்கக் கூடாது. உட்கார்ந்து வேலை செய்ய வேண்டும்” என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


