Idhayam Matrimony

பல்டி திரைவிமர்சனம்

திங்கட்கிழமை, 29 செப்டம்பர் 2025      சினிமா
Baldi-Review 2025-09-29

Source: provided

வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் சில இளைஞர்களை குறிவைத்து பொறியில் சிக்க வைக்கும் கும்பலிடமிருந்து தப்பிக்கும் கதைதான் பல்டி. ஷேன் நிகம், சாந்தனு அவர்களது நண்பர்கள் கபடி விளையாட்டு மூலம் வாழ்க்கையில் முன்னேற நினைக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு பண ஆசைக்காட்டி, கபடி களத்தை மறக்கடித்து, தனது கந்து வட்டி களத்தில் பயணிக்க வைக்கிறார் வில்லன் செல்வராகவன். இதனால், நண்பர்களின் வாழ்க்கை திசை மாறி பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள, அதில் இருந்து மீண்டார்களா ? இல்லையா ? என்பதை ஆக்‌ஷன் பாணியில் சொல்வதே ‘பல்டி. நாயகன் ஷேன் நிகம், கபடி வீரருக்கான அத்தனை உடல் மொழியையும் அசால்டாக வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். சாந்தனு, அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகி ப்ரீத்தி அஸ்ரானி, கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார். செல்வராகவன், அல்போன்ஸ் புத்திரன் இருவரும் சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளனர். இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் பாடல்கள் அருமை. எழுதி இயக்கியிருக்கும் உன்னி சிவலிங்கம், பல்வேறு திரைப்படங்களின் பாதிப்பாக இப்படத்தை காட்டி இருந்தாலும், ஆரம்பம் முதல் முடிவு வரை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் படத்தை நகர்த்தி ரசிக்க வைத்து விடுகிறார். மொத்தத்தில், ஒரு முறை பல்டி யடிக்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து