Idhayam Matrimony

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: புதிய விசாரணை அதிகாரி நியமனம்

திங்கட்கிழமை, 29 செப்டம்பர் 2025      தமிழகம்
TN 2025-09-29

Source: provided

கரூர் : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கரூர் டி.எஸ்.பி. செல்வராஜ் நியமனம் செய்யப்பட்டு இருந்த நிலையில், புதிய விசாரணை அதிகாரியாக ஏ.டி.எஸ்.பி. பிரேமானந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

கரூரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற த.வெ.க. பிரசார கூட்டத்தில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசாரும் விசாரித்து வருகிறார்கள்.

கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணை அதிகாரியாக கரூர் டி.எஸ்.பி. செல்வராஜ் நியமனம் செய்யப்பட்டு இருந்த நிலையில், புதிய விசாரணை அதிகாரியாக ஏ.டி.எஸ்.பி. பிரேமானந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டி.எஸ்.பி. ரேங்கிற்கு மேல் உள்ள ஏ.டி.எஸ்.பி. ரேங் கொண்ட அதிகாரியை நியமித்து கரூர் எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago
View all comments

வாசகர் கருத்து