Idhayam Matrimony

கரூர் சம்பவம்: ஹேமமாலினி எம்.பி. தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை அமைத்தார் ஜே.பி.நட்டா

திங்கட்கிழமை, 29 செப்டம்பர் 2025      இந்தியா
JP-Nata 2025-09-29

Source: provided

புதுடெல்லி : கரூர் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெற்ற பிரசாரத்தில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதன் முழு விவரங்கள் அறிந்துக்கொள்ள ஹேமமாலினி எம்.பி. தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை ஜே.பி. நட்டா அமைத்தார். 

கரூர் வேலாயுதம்பாளையத்தில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர். ஒன்றைப்படை எண்ணிக்கையில் தொடங்கிய பலி எண்ணிக்கை, படிப்படியாக அதிகரித்து, 41 ஆக உயர்ந்ந்துள்ள. கரூர் ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 51 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

இதனிடையே கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. அதன்படி ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தனது விசாரணையை நடத்தி வருகிறார். 

இந்தநிலையில், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக ஹேமமாலினி எம்.பி. தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை அமைத்தார் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா . அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ்லால், ஸ்ரீகாந்த் ஷிண்டே,அப்ரஜிதா சாரங்கி, ரேகா ஷர்மா, புத்த மகேஷ் குமார் ஆகியோர் பாஜக குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு விரைவில் கரூருக்கு வருகை தர உள்ளதாக கூறப்படுகிறது. கரூர் நெரிசலுக்கான காரணத்தை ஆராய்வதோடு பாதிக்கப்பட்டரோரையும் பாஜக குழு சந்திக்கும் என்று ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து