Idhayam Matrimony

திருப்பதி பிரம்மோற்சவம்: அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி மலையப்ப சுவாமி அருள்பாலித்தார்

திங்கட்கிழமை, 29 செப்டம்பர் 2025      ஆன்மிகம்
Tirupati 2024-02-16

Source: provided

திருப்பதி : திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று முன்தினம் காலை மோகினி அவதார உற்சவம் (பல்லக்கு உற்சவம்) நடைபெற்றது. அப்போது மலையப்பசுவாமி, மோகினி அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல் அவருடன் பகவான் கிருஷ்ணர் தனி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை, நேற்று முன்தினம் மாலை தொடங்கி இரவு வரை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்த மலையப்ப சாமியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளில் அனுமந்த வாகன சேவை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட அனுமன் வாகனத்தில் மலையப்ப சுவாமி, கோதண்டராமர் அலங்காரத்தில் கையில் வில்லேந்தியபடி எழுந்தருளி, மாட வீதிகளில் வலம் வந்தார். அப்போது மாட வீதிகளில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து