எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி, இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் அனிதாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், ஏட்டுகள் இருதயராஜ்குமார், இசக்கிமுத்து, காவலர்கள் பழனி பாலமுருகன், பேச்சிராஜா ஆகியோர் தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புல்லாவெளி கடற்கரைப் பகுதியில் நேற்று அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது புல்லாவெளியில் இருந்து கடற்கரைக்கு செல்லும் வழியில் இலங்கைக்கு கடத்துவதற்காக ஒரு மினி லோடு வண்டியில் கொண்டு வந்த சுமார் 30 கிலோ எடை கொண்ட 42 மூட்டைகள் பீடி இலைகளும், மற்றொரு மினி லோடு வண்டியில் கொண்டு வந்த சுமார் 30 கிலோ எடை கொண்ட 41 மூட்டைகள் பீடி இலைகளும் (மொத்தம் 83 மூட்டைகள் பீடி இலைகள்) கியூ பிரிவு போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் அந்த லோடு வண்டிகளின் ஓட்டுநர்களான முள்ளக்காடு, காந்திநகரைச் சேர்ந்த அய்யம்பாண்டி மகன் மதியழகன் (வயது 39), திருச்செந்தூர், வெள்ளாளன்விளை, சர்ச் தெருவைச் சேர்ந்த இஸ்ரவேல் மகன் விஷ்பண்ராஜ் பெபின்(29) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கைப்பற்றப்பட்டுள்ள பீடி இலைகளின் மொத்த மதிப்பு ரூ.80 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


