Idhayam Matrimony

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மதுரை வருகை ரத்து

வியாழக்கிழமை, 2 அக்டோபர் 2025      தமிழகம்
JP-Natta 2023-09-12

சென்னை, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மதுரை வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வருகிற 12-ம் தேதி மதுரையில் இருந்து பிரசார பயணத்தை தொடங்குவதாக இருந்தது. இந்த பிரசார பயணத்தை அகில இந்திய பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா தொடங்கி வைப்பதாகவும் இருந்தது. தினசரி 2 மாவட்டங்கள் என்ற அடிப்படையில் அவரது பயணத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

ஆனால் கரூர் துயர சம்பவத்தால் பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் நிகழ்ச்சிகளை தள்ளி வைத்துள்ளது. பா.ஜ.க.விலும் உண்மை கண்டறியும் குழுவை ஜே.பி. நட்டா நியமித்தார். அந்த குழுவினர் கரூர் சென்று சம்பவம் நடந்த இடங்களை பார்வையிட்டு விசாரித்தனர். இந்த குழுவினர் அடுத்த ஒரு வாரத்துக்குள் தங்கள் அறிக்கையை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பிரசார பயணத்தை தள்ளி வைக்க பா.ஜ.க. முடிவு செய்துள்ளது. இதனால் ஜே.பி.நட்டாவின் வருகையும் ரத்தாகி உள்ளது.

இனி தீபாவளி பண்டிகைக்கு பிறகு பிரசார பயணம் தொடங்கும் என்றும் அப்போது ஜே.பி.நட்டா திட்டமிட்டவாறு பிரசாரத்தை தொடங்கி வைப்பார் என்றும் புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து