Idhayam Matrimony

அகமதாபாத் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இந்தியா நிதான ஆட்டம்: வெஸ்ட் இண்டீஸ் 162 ரன்களுக்கு ஆல் அவுட்

வியாழக்கிழமை, 2 அக்டோபர் 2025      விளையாட்டு
Test-Cricket-2025-10-02

அகமதாபாத், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் எடுத்து நிதானமாக ஆடி வருகிறது.

முதலில் பேட்டிங்....

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாதில் நேற்று (அக்டோபர் 2) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, முதல் இன்னிங்ஸில் 162 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.  மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது.

கே.எல்.ராகுல்... 

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல்.ராகுல் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். இருப்பினும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 54 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் அடங்கும். சாய் சுதர்சன் 7 ரன்களில் ஆட்டமிழக்க, கே.எல்.ராகுல் மற்றும் கேப்டன் ஷுப்மன் கில் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நிதானமாக விளையாடி ரன்கள் குவித்து வருகிறது. நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல்.ராகுல் அரைசதம் கடந்து அசத்தினார்.

நிதான ஆட்டம்...

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் எடுத்துள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஜேடன் சீல்ஸ் மற்றும் கேப்டன் ராஸ்டன் சேஸ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். கே.எல்.ராகுல் 53 ரன்களுடனும், கேப்டன் ஷுப்மன் கில் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து