எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, இந்தியாவில் பால் வளத்துறை வேகமாக வளர்ந்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
அரியாணாவில் ரோடாக் பகுதியில் ரூ. 325 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பால் உற்பத்தி தொழிற்சாலையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது, இந்தியாவில் பால்வளத் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த 11 ஆண்டுகளில் பால்வளத் துறையில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளதாகவும், இந்தக் காலகட்டத்தில் 70 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த பால் உற்பத்தி ஆலை அதிநவீன இயந்திரங்களைக் கொண்டிருக்கும், இது நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாகத் திறக்கப்பட்ட பால் பண்ணையில் தயிர், மோர் உற்பத்திக்கான நாட்டின் மிகப்பெரிய உற்பத்தி நிலையமாகும், இங்கு நாள்தோறும் 150 மெட்ரிக் டன் தயிர், 3 லட்சம் லிட்டர் மோர் மற்றும் 10 மெட்ரிக் டன் இனிப்புகள் தயாரிக்கும் திறன் கொண்டது.
குஜராத்தைத் தலைமையிடமாகக் கொண்ட சபர்கந்தா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சபர் பால் பண்ணை என்று அழைக்கப்படுகிறது. 2029ஆம் ஆண்டுக்குள் கூட்டுறவு சமிதி இல்லாத ஒரு பஞ்சாயத்து கூட நாட்டில் இருக்காது என்பதை உறுதியளிக்கிறேன்.
2024-25ஆம் ஆண்டில் 86 கோடியாக இருந்த பண்ணைகளின் எண்ணிக்கை, தற்போது 11.2 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோன்ற பால் உற்பத்தி 14.6 கோடி டன்னில் இருந்து 23.9 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.
கடந்த 11 ஆண்டுகளில், பால் துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, இதன் காரணமாக விவசாயிகள் வளமாகிவிட்டதாகவும் அவர் கூறினார். அதே நேரத்தில் இந்தியா உலகின் சிறந்த பால் உற்பத்தியாளராக உருவெடுத்துள்ளது என்றும் அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


