Idhayam Matrimony

நடிகர் ரஜினியை போன்று விஜய்யும் அரசியலில் இருந்து பின்வாங்குவார் : எஸ்.வி.சேகர் பேட்டி

சனிக்கிழமை, 4 அக்டோபர் 2025      தமிழகம்
SV-Shekhar 2023-08-28

Source: provided

சென்னை : ரஜினிகாந்தை போன்று விஜய்யும் அரசியலில் இருந்து பின்வாங்கி விடுவார் என்று எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நடிகர் எஸ்.வி.சேகர் வருகை தந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எனது வீட்டுக்கு கடந்த 3 நாளில் 5 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. போலீசார் அக்கறையுடன் ஒவ்வொரு முறையும் எங்கள் வீட்டுக்கு வந்து சோதனை செய்தனர். இதற்காக போலீஸ் கமிஷனருக்கு நன்றி தெரிவிக்க வந்துள்ளேன். கரூரில் 7 மணி நேரம் கடந்து விஜய் வந்தது மாபெரும் தவறு. சினிமா நடிகன் பின்னால் செல்லாதீர்கள். சினிமா நடிகன் வெறும் பொம்மை. திரையில் வருவதை பார்த்து ஏன் நம்புகிறீர்கள்.

விஜய்யின் மேக்கப் கரூரில் கலைந்து போய்விட்டது. இதுபோன்ற பிரச்சினைகள் எல்லாம் வரும் என்று தெரிந்துதான் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் சப்தம் இல்லாமல் விலகி போய்விட்டார். அவர், ‘பார்ப்பதற்கு தண்ணீர் தெளிவாக இருக்கும். உள்ளே காலை விட்டால்தான் என்ன முதலை இருக்கும்' என்று சொல்லி இருக்கிறார். 

கரூரில் 27 ஆயிரம் பேர் வந்த கூட்டத்தை கட்டுப்படுத்த தெரியாத விஜய், 10 கோடி மக்கள் இருக்கிற தமிழ்நாட்டை கட்டுப்படுத்தி விடுவாரா?. விஜய் எனக்கு விரோதி கிடையாது. விஜய் அவரது தந்தையை மதிக்காமல் புஸ்சி ஆனந்தை மதித்ததால் வந்த கோளாறுதான் இது. கரூர் விவகாரத்தில் விஜய் மீது நடவடிக்கை எடுத்து அவரை இன்னும் பெரிய ஆளாக்குவதற்கு இந்த அரசு முயற்சிக்காது. ரஜினிகாந்தை போன்று விஜய்யும் அரசியல் இருந்து பின்வாங்கி விடுவார். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து