முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லையில் கோவிலுக்குள் புகுந்த 3 கரடிகள் அட்டகாசம்

சனிக்கிழமை, 4 அக்டோபர் 2025      தமிழகம்
Puli-1

Source: provided

நெல்லை : நெல்லையில் கோவிலுக்குள் புகுந்த 3 கரடிகள் அட்டகாசத்தில் ஈடுபட்டது.

பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார கிராமங்களான அனவன்குடியிருப்பு, பசுக்கிடைவிளை, பொதிகையடி, மேட்டு தங்கம்மன் கோவில் தெரு உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர்ந்து கரடிகள் நடமாட்டம் நிலவி வருகிறது.

கடந்த 3 தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் விக்கிரமசிங்கபுரம் மேட்டு தங்கம்மன் கோவில் தெருவில் ரேஷன் கடை அருகே உள்ள முத்துமாரி அம்மன் கோவிலில் 3 கரடிகள் புகுந்தன. அவைகள், கோவிலில் இருந்த பூஜை பொருட்களை சேதப்படுத்தின. மேலும் கோவிலில் விளக்கு ஏற்றுவதற்காக வைத்திருந்த எண்ணெயை குடித்து சென்றன.

இது கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. கோவிலுக்குள் புகுந்து கரடி அட்டகாசத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள், அப்பகுதியில் தொடர்ந்து நடமாடும் கரடிகளை கூண்டு வைத்து பிடித்து அடர் வனப்பகுதியில் விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து