Idhayam Matrimony

சுற்றுப்பயண தேதிகளில் திடீர் மாற்றம்: வரும் 8, 9-ம் தேதிகளில் நாமக்கல் மாவட்டத்தில் இ.பி.எஸ். பயணம்

சனிக்கிழமை, 4 அக்டோபர் 2025      தமிழகம்
EPS 2025-08-17

Source: provided

சென்னை : நாமக்கல் மாவட்டத்தில் வருகிற 5, 6ம் தேதிகளில் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள இருந்த 5ம் கட்ட பிரசார சுற்றுப் பயணத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டு, வரும் 8, 9ம் தேதிகளில் நாமக்கல்லில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொள்வார் என்று அ.தி.மு.க. தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- அ.தி.மு.க. பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் `மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற உன்னத நோக்கத்துடனான `புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணம்’- 8.10.2025 முதல் 10.10.2025 வரையிலான ஐந்தாம் கட்ட சுற்றுப் பயணத் திட்டம்- திருத்தம் பின்வருமாறு:

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி `மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு, கடந்த 7.7.2025 முதல் சட்டமன்றத் தொகுதி வாரியாக தொடர் பிரசார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் ஐந்தாம் கட்ட சுற்றுப் பயணத் திட்டத்தில், 5.10.2025, 6.10.2025 ஆகிய தேதிகளில் நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ள இருந்த சுற்றுப் பயணத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டு,  தேதி, கிழமை, கழக அமைப்பு மாவட்டம், சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் சட்டமன்றத் தொகுதி வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

1) 8.10.2025 - புதன் - நாமக்கல்- திருச்செங்கோடு, குமாரபாளையம்.

2) 9.10.2025 - வியாழன்- நாமக்கல்- நாமக்கல், பரமத்தி வேலூர்.

3) 10.10.2025 - வெள்ளி- ஈரோடு - மொடக்குறிச்சி, ஈரோடு (கிழக்கு).

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து