Idhayam Matrimony

வந்தவாசி, அரூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு : சட்டசபை தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை

சனிக்கிழமை, 4 அக்டோபர் 2025      தமிழகம்
CM-1 2025-06-28

Source: provided

சென்னை : வந்தவாசி, அரூர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார். அப்போது சட்டப்பேரவை தேர்தல் பணிகள் தொடர்பாக பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். 

தி.மு.க. தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், ”உடன் பிறப்பே வா” என்ற தலைப்பில் ‘ஒன் டூ ஒன்’ மூலம் தொகுதி வாரியாக நிர்வாகிகளை கடந்த ஜூன் 13ம் தேதி முதல் நேரில் சந்தித்து பேசி வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்தவாசி, அரூர் சட்டமன்ற தொகுதியின் நிர்வாகிகளை தனித்தனியே அழைத்து பேசினார். இதில் தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் பங்கேற்றனர். அவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

சந்திப்பின் போது சட்டப்பேரவை தொகுதி நிலவரம், கட்சி வளர்ச்சி பணி, ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் தொடர்பான விவரங்களை கேட்டறிந்தார். தி.மு.க. அரசு செயல்படுத்தியுள்ள மக்கள் நலன்சார்ந்த திட்டங்கள் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்றும் நிர்வாகிகளுடன் கேட்டறிந்தார். தி.மு.க. அரசு செய்துள்ள திட்டங்களை மக்களை நேரடியாக சந்தித்து விளக்க வேண்டும். 

கடந்த தேர்தலை விட வரும் சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. கூட்டணியை வெற்றி பெற பாடுபட வேண்டும். 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி வாகை சூடி மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைய உறுதி ஏற்க வேண்டும் என்று அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தன்னை சந்தித்த அனைத்து நிர்வாகிகளுக்கும் புத்தகங்களை பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து