Idhayam Matrimony

மருத்துவமனையில் நேரில் சந்தித்து ராமதாசை நலம் விசாரித்த துணை முதல்வர் உதயநிதி

செவ்வாய்க்கிழமை, 7 அக்டோபர் 2025      தமிழகம்
DCM 2025-10-07

Source: provided

சென்னை : பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸை மருத்துவமனையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்காக நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவரை ஆஸ்பத்திரியின் டாக்டர்கள் குழுவினர் பரிசோதித்தனர். தொடர்ந்து அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் டாக்டர்களின் கண்காணிப்பில் உள்ளார். மேலும் சில நாட்கள் ஆஸ்பத்திரியில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ராமதாஸை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மூத்த அரசியல் தலைவர் அய்யா ராமதாஸ், உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரை மருத்துவமனையில் நேற்று சந்தித்து நலம் விசாரித்தோம். அவர் விரைவில் பூரண குணமடைந்து வழக்கமான பணிகளுக்குத் திரும்பிட விழைகிறோம். என  தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து