Idhayam Matrimony

இந்தியாவுடன் மீண்டும் போர்: பாக். அமைச்சர் திமிர் பேச்சு

புதன்கிழமை, 8 அக்டோபர் 2025      உலகம்
Pak-1 2025-10-08

Source: provided

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவுடன் மீண்டும் போர் ஏற்படுவதை மறுக்க முடியாது என்று பாகிஸ்தான் அமைச்சர்  தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீரின் பகல்ஹாமில் கடந்த ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த கொடூரத் தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர்  பலியாகினர். இதையடுத்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது.

ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா நடத்திய இந்த தாக்குதலில், பாகிஸ்தானில் உள்ள பல பயங்கரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன. இதையடுத்து, இந்தியாவின் எல்லையோர மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன்களை கொண்டு தாக்க முயன்றது. பாகிஸ்தானின் இந்த அடாவடிக்கும் இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. 3 நாள் நீடித்த இந்த சண்டையில் பாகிஸ்தானுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. இதையடுத்து, இந்தியாவிடம் சண்டை நிறுத்தம் செய்யுமாறு பாகிஸ்தான் கோரியது. இதன் பிறகே இரு நாடுகளுக்கும் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டது.

பாகிஸ்தான், சமீபகாலமாக இந்தியாவுக்கு எதிராக ஆத்திரமூட்டும் கருத்துக்களை கூறி வருகிறது. அந்த வகையில், பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் காவ்ஜா ஆசிப் அடாவடியாக பேசியுள்ளார். காவ்ஜா ஆசிப் கூறியதாவது:“இந்தியாவுடன் மீண்டும் போர் ஏற்படுவதை மறுக்க முடியாது. மீண்டும் போர் வந்தால், முன்பை விட சிறந்த முடிவை அடைவோம்,” என்று அடாவடியாக பேசியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து