Idhayam Matrimony

கரூர் சம்பவ வழக்கில் நீதிபதி குறித்து அவதூறு: ஓய்வுபெற்ற போலீஸ் கைது

புதன்கிழமை, 8 அக்டோபர் 2025      தமிழகம்
Jail 2024-05-01

Source: provided

சென்னை : கரூர் சம்பவ வழக்கில் நீதிபதி குறித்து அவதூறு குறித்து ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை சமீபத்தில் சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, தவெக தலைவர் விஜய் குறித்து கண்டனங்களை முன்வைத்தார்.

இந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துகளை பரப்பியதாக சென்னை அஸ்தினாபுரம் பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகரான அஸ்தினாபுரம் சசிகுமார், தவெக, ஐ.டி.விங்கை சேர்ந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த டேவிட், தூத்துக்குடி வேம்பூரை சேர்ந்த அந்தோணி சகாய மைக்கேல் ராஜ் ஆகிய 4 பேரையும் ஏற்கனவே பரங்கிமலையில் சென்னை தெற்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் நீதிபதி குறித்து அவதூறு பரப்பியதாக கோடம்பாக்கத்தை சேர்ந்த வரதராஜன் (64) என்பவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். இவர் காவல்துறையில் கைரேகை பிரிவில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து