எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருச்செங்கோடு : திருச்செங்கோடு தொகுதியில் அ.தி.மு.க.வின் வெற்றி உறுதியாகிவிட்டது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று மாலை, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியில் எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பரப்புரை நடத்தினார்.
அப்போது அவர் உரையாற்றியதாவது:- திருச்செங்கோடு தொகுதியில் அ.தி.மு.க.வின் வெற்றி உறுதியாகிவிட்டது. அ.தி.மு.க. எங்கு கூட்டம் நடத்தினாலும் அது வெற்றி கூட்டமாக இருக்கும். தி.மு.க. அரசு திருச்செங்கோடு தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. திருச்செங்கோடு தொகுதிக்கு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நிறைய திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.
கொரோனா பெருந்தொற்று காலத்திலும் அ.தி.மு.க. அரசு மக்களை காப்பாற்றியது. கொரோனா பரவல் காலத்தில் மாணவர்களை ஆல் பாஸ் ஆக்கியது அ.தி.மு.க. அரசு. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஆட்டோ வாங்க ரூ.75,000 மானியம், தாலிக்கு தங்கம் திட்டத்தில் பட்டு வேட்டி, பட்டுச் சேலை வழங்கப்படும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


