Idhayam Matrimony

மதுரையில் உலகத்தரத்துக்கு இணையாக அமைக்கப்பட்டுள்ள வேலம்மாள் கிரிக்கெட் மைதானத்தை தொடங்கி வைத்தார் எம். எஸ். தோனி

வியாழக்கிழமை, 9 அக்டோபர் 2025      விளையாட்டு
Dhoni

Source: provided

மதுரை: இந்திய கிரிக்கெட் நட்சத்திர வீரராக திகழ்ந்தவரும்,முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேற்று, ரூ.325 கோடி செலவில்  மதுரையில் அமைந்துள்ள வேலம்மாள் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிவேலம்மாள் கல்வி நிறுவனங்களின் தலைவர் எம்.வி.எம்.முத்துராமலிங்கம் முன்னிலையில் நடைபெற்றது.

சர்வதேச தர பீட்ச்...

உலகத் தரத்துக்கு இணையாக அமைக்கப்பட்ட இந்த மைதானம், இளம் விளையாட்டாளர்களுக்கான திறன்வள மேம்பாட்டிற்கு புதிய ஒளியாக திகழ்கிறது. இதில் சர்வதேச தர பீட்ச், இரவைப் பகலாக்கும் விளக்குகள்,பகல் இரவு ஆட்டங்களுக்கான , ஆட்டக்காரர்களுக்கான நவீன அறைகள், டிஜிட்டல் ஸ்கோர் போர்டு, பயிற்சி வலைகள், உடற்பயிற்சி கூடம், மீடியா மற்றும் வி.ஐ.பி. கேலரிகள், மேலும் பெரிய அளவிலான பார்வையாளர் இருக்கைகள் ஆகிய வசதிகள் உள்ளன.மழை பெய்தாலும் அடுத்த 10 நிமிடங்களில் மைதானம் விளையாடுவதற்கு தகுந்தாற் போல காய்ந்துவிடும் வகையில் நவீன தொழில்நுட்பத்தில் இந்த மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது.

கனவுத் தளமாக... 

இந்நிகழ்ச்சியில் எம்.எஸ்.தோனி பேசியதாவது, இப்படிப்பட்ட உலகத் தரம் வாய்ந்த வசதிகளைக் கொண்ட வேலம்மாள் கிரிக்கெட் மைதானம் , எதிர்கால கிரிக்கெட் வீரர்களின் கனவுத் தளமாக விளங்கப் போகிறது என்றார். மேலும் வேலம்மாள் தலைவர் எம்.வி.எம். முத்துராமலிங்கம் பேசியதாவது-இந்த மைதானம் தோனி போன்ற உலக கிரிக்கெட் ஜாம்பவவான் திறந்து வைப்பது எங்களுக்கு பெருமையாக உள்ளது. திறமைக்கு தளம் அமைத்துத்தரும் எங்கள் நோக்கை இது இன்னும் உயர்த்துகிறது. மேக்கிங் சாம்பியன் என்ற நோக்கத்தில் செயல்படும் வேலம்மாள் நிறுவனம், இன்று விளையாட்டு உலகிலும் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது என்றார்.

2-வது பெரிய அரங்கு...

சென்னை சேப்பாக்கத்திற்கு அடுத்து தமிழ்நாட்டின் 2-வது மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் இது தான். இதை இந்திய முன்னாள் கேப்டன் தோனி இன்று திறந்து வைக்கிறார். எதிர்காலத்தில் இங்கு டி.என்.பி.எல்., ஐ.பி.எல்., ரஞ்சி கிரிக்கெட் போன்ற போட்டிகள் நடக்க வாய்ப்புள்ளது. முன்னதாக நேற்று மதியம் மதுரை விமான நிலையத்துக்கு வந்த தோனியை வரவேற்க மதுரை விமான நிலையத்தில் குவிந்திருந்த ரசிகர்கள் அவரைப் பார்த்து தல... தல... என கோஷமிட்டு உற்சாக வரவேற்பளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து