எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சென்னையில் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி மாணவர் உயிரிழந்தான்.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கவி பிரகாஷ்(21), கேரளாவைச் சேர்ந்த முகமது ஆதில்(21), உத்தரபிரதேசத்தை சேர்ந்த ரோஹித் சந்திரா(21) உள்பட 14 மாணவர்கள் நேற்று காலை 7 மணி அளவில் பெசன்ட் நகர் கடலுக்கு வந்தனர்.
பின்னர் பிரகாஷ், ரோஹித் சந்திரா, முகமது ஆதில் ஆகிய 3 மாணவர்கள் மட்டும் கவர்னர் கெஸ்ட் ஹவுஸ் அருகே கடலில் இறங்கி குளித்தனர். அப்போது ராட்சத அலையில் சிக்கிய மூன்று பேரும் ஆழத்திற்கு இழுத்து செல்லபட்டனர். இதை பார்த்து உடன் வந்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தனர்.
இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் சிலர் வந்து உடனடியாக கடலில் இறங்கி பிரகாஷ் மற்றும் முகமது ஆதில் ஆகியோரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால் பிரகாஷ் இறந்து கிடந்தார். முகமது ஆதில் மயக்க நிலையில் இருந்தார். உடனடியாக அவரை கொண்டு சென்று அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது பற்றி தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சாஸ்திரி நகர் போலீசார் மாணவன் பிரகாஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயபேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மாயமான ரோஹித்தை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


