Idhayam Matrimony

காஷ்மீர் மாநிலங்களவை தேர்தல்: 3 பா.ஜ.க. வேட்பாளர்கள் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 12 அக்டோபர் 2025      இந்தியா
BJP-Office

Source: provided

புதுடெல்லி : ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 4 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வரும் 24ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இதில் போட்டியிட 3 வேட்பாளர்களை பா.ஜ.க. அறிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநில பா.ஜ.க. தலைவர் சத்பால் சர்மா, குலாம் முகமது மிர், ராகேஷ் மகாஜன் ஆகிய வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் கட்சிகளின் பலம் அடிப்படையில், ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி - காங்கிரஸ் கூட்டணி மூன்று இடங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளது. பா.ஜ.க. ஒரு இடத்தில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளது.

எனினும், தேர்தலின்போது மற்ற கட்சிகளின் எம்எல்ஏக்களை ஈர்க்கும் நடவடிக்கைகளை பா.ஜ.க. தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாகவே, மூன்று வேட்பாளர்களை அது களத்தில் இறக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி மூன்று வேட்பாளர்களை கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது. நான்காவது இடத்துக்கு காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அக்கட்சி தெரிவித்திருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து