Idhayam Matrimony

உ.பி.யில் பாலியல் வன்கொடுமை குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை

திங்கட்கிழமை, 13 அக்டோபர் 2025      இந்தியா
Gun 2023-10-05

Source: provided

லக்னோ : உத்திரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளி போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் முகமதுபூர் கிராமத்தை சேர்ந்தவர் ஷாகித் (வயது 35). இவர் மீது சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தது, கொள்ளை, கொலை மிரட்டல் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனிடையே தலைமறைவாக இருந்த ஷாகித்தை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். மேலும், அவரின் இருப்பிடம் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் சன்மானமும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அம்மாநிலத்தின் பாக்பத் மாவட்டம் சரூர்பூர் கிராமத்தில் ஷாகித் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து , அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த ஷாகித், போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றார். இதையடுத்து, ஷாகித் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் ஷாகித் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து ஷாகித்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.  என்கவுன்டர் நடந்த பகுதியில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து