முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச விதிகளை சில நாடுகள் வெளிப்படையாக மீறுகின்றன : ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 14 அக்டோபர் 2025      இந்தியா
Rajnath-Singh 2023-11-14

Source: provided

புதுடெல்லி : உலக நாடுகளில் அமைதிக்காப்பு பணிகளில் இந்திய ராணுவ பெண் அதிகாரிகளின் பங்களிப்பு உள்ளதாக பெருமிதம் தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சர்வதேச விதிகளை சில நாடுகள் வெளிப்படையாக மீறுகின்றன என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சர்வதேச அமைதிக்காப்பு படைகளுக்கு வீரர்களை அனுப்பி பங்களிப்பு செய்யும் நாடுகளின் தலைமை ராணுவ அதிகாரிகள் மாநாடு நாளை வரை டெல்லியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை இந்தியா முதல்முறையாக தலைமை தாங்கி நடத்துகிறது. மாநாட்டின் தொடக்க விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:-

உலக நாடுகள் பலவற்றில் அமைதிக்காப்பு பணிகளில் பணியாற்றும் இந்திய ராணுவ பெண் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் நம்பிக்கையை வளர்த்து வருகிறார்கள். இப்படைகளில் பெண்கள் செயல்படுவது அமைதி காக்கும் பணியின் செயல்திறனை மேம்படுத்துகிறது, உள்ளூர் மக்களிடம் நம்பிக்கையை உருவாக்குகிறது.

இந்த சேவையில் இந்தியா முன்னோடியாக இருந்து வருகிறது. 2007-ம் ஆண்டு லைபீரியாவில் பணியமர்த்தப்பட்ட எங்கள் அனைத்து மகளிர் பாதுகாப்பு பிரிவு, ஒரு உலகளாவிய அடையாளமாக மாறியது. அவர்களின் தொழில்முறை மற்றும் புரிதலுடன் கூடிய சேவை, லைபீரியப் பெண்களின் ஒரு தலைமுறையை அவர்களின் தேசிய காவல்துறையில் சேரத் தூண்டியது.

தொடர்ந்து பேசுகையில், அமைதி காக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து சீராக நடைபெற அனைத்து உறுப்பு நாடுகள், குறிப்பாக மேம்பட்ட தொழில்நுட்ப திறன்களைக் கொண்டவர்கள், தங்களது துருப்புக்கள், தளவாடங்கள், தொழில்நுட்பம் போன்றவை மூலம் தங்கள் ஆதரவை அதிகரிக்க வேண்டும். 

இப்போதெல்லாம், சில நாடுகள் சர்வதேச விதிகளை வெளிப்படையாக மீறுகின்றன, அதே நேரத்தில் சில நாடுகள் தன்னிச்சையான விதிகளை உருவாக்கி அடுத்த நூற்றாண்டில் ஆதிக்கம் செலுத்த விரும்புகின்றன. இந்தியா, சர்வதேச விதிகள் சார்ந்த ஒழுங்கை நிலைநிறுத்துவதில் வலுவாக நிற்கிறது. இந்தியா மகாத்மா காந்தியின் பூமி, இங்கு அமைதி, அகிம்சை ஆகியவை ஆழமாக வேரூன்றியுள்ளது. மகாத்மா காந்தியைப் பொறுத்தவரை, அமைதி என்பது போர் இல்லாதது மட்டுமல்ல, நீதி, நல்லிணக்கம் மற்றும் தார்மீக வலிமையம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து