Idhayam Matrimony

விளையாட்டு பல்கலை. சட்ட மசோதா: சுப்ரீம் கோர்ட்டில் கவர்னருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு

புதன்கிழமை, 15 அக்டோபர் 2025      இந்தியா
TN 2023-04-06

Source: provided

புதுடெல்லி : உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா தொடர்பாக கவர்னருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் மசோதாக்களை கவர்னர் கையாளும் விதம் அரசமைப்புக்கு எதிரானது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக கவர்னர் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழக சட்டசபையில் கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விளையாட்டு பல்கலைக்கழகக் குழுவில் நிதித்துறை செயலர் ஒருவரை நியமிக்க ஏதுவாக சட்ட திருத்தம் செய்யப்பட்டிருந்தது.

இந்த மசோதாவை ஜனாதிபதிக்கு தமிழ்நாடு கவர்னர் அனுப்பி வைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கவர்னருக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “மசோதாக்களை கவர்னர் கையாளும் விதம் அரசமைப்புக்கு எதிரானது. கவர்னரின் நடவடிக்கை தன்னிச்சையானது என்று அறிவிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து