Idhayam Matrimony

கரூர் நெரிசல் சம்பவத்தை எடுத்த அ.தி.மு.க.வினர்: துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சுட்டிக்காட்டிய அமைச்சர்கள்

புதன்கிழமை, 15 அக்டோபர் 2025      தமிழகம்
ADMK-2025-10-15

சென்னை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சுட்டிக்காட்டி அமைச்சர்கள் பேசியதாவல் அ.தி.மு.க.வினர் வெளிநாடப்பு செய்தனர்.

தமிழ்நாடு சட்டசபையின் 2-ம் நாள் அமர்வு நேற்று தொடங்கியது. முதலில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். இதனை தொடர்ந்து கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்து பேசினார். 

இதனை தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கரூர் கூட்ட நெரிசலில் சென்ற ஆம்புலன்ஸ் வாகனங்களில் தி.மு.க ஸ்டிக்கர் வந்தது எப்படி? அரசியல் செய்வது யார்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார். இதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்.

இதற்கிடையே, கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக விவாதித்தபோது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சுட்டிக்காட்டி அமைச்சர்கள் பேசினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டனர். அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து, அ.தி.மு.க.வுக்கு ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளதாக சபாநாயகர் அப்பாவு பேசினார்.

அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் எதை எதை நீக்க வேண்டும் என்று இருக்கையில் அமர்ந்து சொல்லுங்கள் என்று துரைமுருகன் கூறினார். இருப்பினும், சபாநாயகர் இருக்கையின் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 13 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 13 hours ago
View all comments

வாசகர் கருத்து