Idhayam Matrimony

கென்யா முன்னாள் பிரதமர் கேரளாவில் மரணம்

புதன்கிழமை, 15 அக்டோபர் 2025      இந்தியா
Kenya 2025-10-15

Source: provided

திருவனந்தபுரம் : கென்யா முன்னாள் பிரதமர் ரைலா ஒடிங்கா கேரளாவில் மரணம் அடைந்தார்.

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கென்யா. அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ரைலா ஒடிங்கா (வயது 80). இவர் 2008 முதல் 2013ம் ஆண்டு வரை கென்யாவின் பிரதமராக செயல்பட்டுள்ளார். இதனிடையே, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ரைலா ஒடிங்கா ஆயுர்வேத சிகிச்சை பெற கேரளாவுக்கு வந்துள்ளார். அவர் எர்ணாகுளத்தில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், ரைலா ஒடிங்கா நேற்று காலை ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் நடைபயிற்சி செய்துகொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீட்ட உடன் இருந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ரைலா ஒடிங்காவை பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். ரைலா ஒடிங்காவின் உடல் கென்யாவுக்கு கொண்டுசெல்லப்பட உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து