எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை: ஐ.பி.எல். மதிப்பு தொடர்ந்து 2 ஆண்டுகளாக சரிவை கண்டுள்ளது. அதன் மதிப்பு ரூ.76,100 கோடியாக தற்போது குறைந்துள்ளது.
உச்சத்துக்கு சென்ற...
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போட்டி வர்த்தக ரீதியில் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. உலகில் அதிக அளவில் வருவாயை ஈட்டி தரும் போட்டிகளில் ஒன்றாக ஐ.பி.எல். இருக்கிறது. இதனால் அதன் மதிப்பு உச்சத்துக்கு சென்றது. இந்த நிலையில் வரலாற்றில் முதல் முறையாக ஐ.பி.எல்.லின் மதிப்பு தொடர்ந்து 2 ஆண்டுகளாக சரிவை சந்தித்து உள்ளது.
நிலையானதாக...
2023-ல் ரூ.92,500 கோடியில் இருந்த ஐ.பி.எல். மதிப்பீடு 2024-ல் ரூ.82,700 கோடியாகவும், இந்த ஆண்டில் ரூ.76,100 கோடியாகவும் சரிந்து உள்ளது. 2025-ம் ஆண்டில் ஒட்டு மொத்த மதிப்பு 8 சதவீதம் குறைந்து உள்ளது. அதே நேரத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியின் மதிப்பு பெரும்பாலும் மாறாமல் நிலையானதாக இருக்கும் என்று ஆய்வு குழு தெரிவித்து உள்ளது. ஒளிபரப்பு உரிமம், விளம்பரதாரர்கள் உள்ளிட்டவற்றால் இந்த சரிவு காணப்பட்டதாக கூறப்படுகிறது. ஐ.பி.எல். அணிகளை பொறுத்தவரை மதிப்பில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) முதல் இடத்தில் உள்ளது. அதை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் உள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


